முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

PM விஸ்வகர்மா திட்டத்திற்கான லோகோ மற்றும் டேக்லைன் ஒன்றை வடிவமைத்தல்

PM விஸ்வகர்மா திட்டத்திற்கான லோகோ மற்றும் டேக்லைன் ஒன்றை வடிவமைத்தல்
தொடக்க தேதி :
Jul 21, 2023
கடைசி தேதி :
Aug 10, 2023
23:45 PM IST (GMT +5.30 Hrs)
View Result Submission Closed

விஸ்வகர்மா திட்டம் 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்கள், தங்கள் கைகளால் வேலை செய்து வருகின்றனர்...

விஸ்வகர்மா திட்டம் 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் கைகளால் வேலை செய்யும் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்கள், பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்குப் பெயர் பெற்று தருகின்றனர். பொதுவாக இவர்கள் விஸ்வகர்மா என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சுயசார்பு இந்தியாவின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கின்றன. இவர்களுக்கான உதவி தொகுப்பு முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம், அவர்களது உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், அளவை உயர்த்தவும், அவர்களைச் சென்றடையவும், MSME மதிப்புச் சங்கிலியுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்த உதவும். இந்த திட்டத்தின் கூறுகள் நிதி ஆதரவு மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி அணுகல், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான பசுமை தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு, பிராண்ட் புரமோஷன், உள்ளூர் மற்றும் உலக சந்தைகளுடன் இணைப்பு, டிஜிட்டல் கட்டணங்கள், அத்துடன் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBCகள், பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

PM விஸ்வகர்மா திட்டம், கைவினைஞர்கள் / கைவினைகலைஞர்களின் தயாரிப்புகள் / சேவைகளின் தரம், அளவு மற்றும் அணுகலை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் அவற்றை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இத்தகைய தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBCகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தின் இதர நலிவடைந்த பிரிவினருக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும்.

PM விஸ்வகர்மா என்ற புதிய திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் பாரம்பரிய பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்த முழுமையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பின்வரும் ஆறு கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன:
1. PM விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை
2. உத்தரவாதத்துடன் சலுகை வட்டி விகிதத்தில் கடன் ஆதரவு
3. திறமை
4. கருவிதொகுப்பு இ-வவுச்சர்
5. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத்தொகை
6. சந்தைப்படுத்தல் ஆதரவு

திட்டத்தின் நோக்கங்கள்:
1. கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி தருவது
2. கைவினைஞர்களை பொருளாதாரத்தின் முறையான துறைக்குள் கொண்டு வருதல்.
3. எளிதில் கடன் பெற வழிவகை செய்தல்.
4. திறன் பயிற்சி மூலம் தற்போதுள்ள மனிதவளத்தின் அறிவு மற்றும் திறன் நிலையினை மேம்படுத்துதல்.
5. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைகலைஞர்களின் வருவாய் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துதல்.
6. தொழில் நுட்பத் திறன்களை மேம்படுத்தி அதன் மூலம் வருமானம் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
7. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் தேவையான ஆதரவு / இணைப்புகளை வழங்குதல்.
8. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.
9. அவர்களின் உற்பத்திப் பொருட்கள்/சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும், தரத்தினை உறுதி செய்யவும் உதவுதல்.
10. கைவினைஞர்களின் சமூக நிலையினை மாற்றியமைத்தல் மற்றும் அவர்களை சமுதாயத்தில் முன்னேற்றுதல்.

இங்கே கிளிக் செய்யவும் PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வரும் வர்த்தகங்களின் ஆரம்பப் பட்டியலைப் பார்ப்பதற்கு.

இன்நிலையில்,மைகவ் நிறுவனங்களுடன் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் குடிமக்களை அழைக்கிறது PM விஸ்வகர்மா திட்டத்தின் சாராம்சத்தையும், உணர்வையும் பிரதிபலிக்கும் சின்னம் மற்றும் டேக்லைன் ஒன்றை வடிவமைத்தல்.

பாராட்டுகள்:
சின்னம் மற்றும் டேக்லைன் ஆகியவற்றின் சிறந்த ஐந்து பதிவுகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
முதல் பரிசு: 1,00,000/-
2வது பரிசு: 50,000/-
3வது பரிசு: 25,000/-
4வது பரிசு: 15,000/-
5வது பரிசு: 10,000/-

இங்கே கிளிக் செய்யவும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க (PDF: 193 KB)

இந்த டாஸ்க்கின் கீழ் உள்ள சமர்ப்பிப்புகள்
308
மொத்தம்
0
அங்கீகரிக்கப்பட்டது
308
பரிசீலனையில் உள்ளது