முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

தேசிய சுற்றுலாதினம் 2022

பதாகை

அறிமுகம்

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 75 வார பிரம்மாண்டமான கொண்டாட்டமான ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் கொண்டாடும் வேளையில் ஜனவரி 25, 2022 அன்று தேசிய சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்களாகப் புகழ் பெற்ற அற்புதமான இடங்களால் இந்தியா உலகளவில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கலாச்சாரம் நிறைந்த பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. நம் நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நமது நாட்டின் அழகைப் பாராட்டவும், சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் ஒரு நோக்கத்துடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய சுற்றுலா தினத்தின் கருப்பொருள் கிராமப்புற மற்றும் சமூக மைய சுற்றுலா.