முகப்பு | மைகவ்

அணுகல்தன்மை
அணுகல் கருவிகள்
வண்ண சரிசெய்தல்
உரை அளவு
வழிசெலுத்தல் சரிசெய்தல்

குடியரசுதினம் 2021

பேனர்

குடியரசுதினம் 2021

மிக நீண்ட சுதந்திரப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 21 துப்பாக்கிகளின் வணக்கத்துடன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய தேசியக் கொடியை ஏற்றியது, இந்தியக் குடியரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிறப்பைக் குறித்தது. அதன் பின்னர் ஜனவரி 26 தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இந்திய குடியரசு தினமாக அங்கீகரிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாள் முதல், ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் விழாக்களுடனும், தேச பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ள ரைசினா மலையிலிருந்து, ராஜ்பாத், இந்தியா கேட் கடந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வரை தலைநகர் புதுடெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து ராணுவ வீரர்களையும் நினைவு கூறும் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து 21 துப்பாக்கி வணக்கம் செலுத்த, குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏற்ற, தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இது இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் அற்புதமான அணிவகுப்புகளின் தொடர்ச்சியான தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அழகிய காட்சியகங்களை உருவாக்கி தங்கள் கலாச்சாரத்தை, தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

நமது 71வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு ஆன்லைன் செயல்பாடுகளை மைகவ் ஏற்பாடு செய்துள்ளது

நடைபெற்றுவரும் செயல்பாடுகள்

நாட்டுப்பற்று சார்ந்த வினாடி வினா

நாட்டுப்பற்று சார்ந்த வினாடி வினா

கட்டுரை மற்றும் நாட்டுப்பற்று கவிதை எழுதும் போட்டி

கட்டுரை மற்றும் நாட்டுப்பற்று கவிதை எழுதும் போட்டி

1971 வங்காளதேச விடுதலைப் போர் தொடர்பான வினாடி வினா

1971 வங்காளதேச விடுதலைப் போர் தொடர்பான வினாடி வினா